Wednesday, December 10, 2008
Before marriage…..
He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: No! Don’t even think about it.
She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: No! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get.
She: Will you hit me?
He: Are you crazy! I’m not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!
After marriage….
Simply read from bottom to top.
Friday, November 28, 2008
உன் கடைசி வார்த்தைகளில் கழுத்தறுப்பட்ட என் கனவுகள்....
பீய்ச்சும் குருதியில் முங்கி.. மெல்ல சாகும் என் காதல்....
காத்திருப்பை மட்டுமே பரிசளித்த காலத்தை வைதபடிக்கு ...
வீசுகிறேன் வெறுங்கையை ......
உதிர்ந்து சிதறும் கடைசி ஒற்றை ரோஜா ...
கணவனின் கை கோர்த்தபடிக்குநீ சிந்திய
ஏளன புன்னகையின் விடத்தில்
இன்னும் இன்னும் நீலம் பாரிக்கும் பிரபஞ்சம்....
இதயம் கிள்ளி கைத்தடியில் சொருகியபடிக்கு
நீளும் என் பயணம்.....
திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன: * நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக பொழுதைக் கழிக்க வேண்டும். அதில், வெளியே சென்று இரண்டு முறை டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம். * மாதத்துக்கு இரு முறை காதலுணர்வுடன் கணவனும், மனைவியும் மாலை வேளையில் ஒரு சிறிய வாக்கிங் போக வேண்டும். * குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு, கணவனும் மனைவியும் தனியாக, மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ அல்லது சினிமா தியேட்டருக்கோ செல்ல வேண்டும். * மாதத்துக்கு ஒருமுறையேனும், கணவன் தனது மனைவிக்கு பூச்செண்டு போன்ற ஏதேனும் ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும். இவற்றை எப்போதும் கடைப்பிடித்து, அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்... திருமண வாழ்க்கை இனிதாக தொடரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
(மூலம் - வெப்துனியா)
Tuesday, November 18, 2008
பீர், காபி, ஒயின் அருந்தினால் விந்தணுக்கள் குறையும்: ஆய்வு | |
| |
பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், பீர், ரெட் ஒயின் மற்றும் காபி போன்றவற்றில் உள்ள ஆஸ்ட்ரோஜென்போன்ற பொருட்கள், ஆண் தன்மையை பாதிக்கும் வேதிப் பொருட்களுக்கு இணையான குணங்களை பெற்றிருப்பது தெரியவந்தது. மேற்கண்ட மதுவகைகளுடன் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து சாப்பிடும்போது, ஆண் தன்மை முற்றிலும் நீர்த்துப் போகிறதாம். அதாவது, விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. இதனால், ஆண்களின் கருத்தரிப்பு விகிதமும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
செல்போனால் ஆண்மைக்கு ஆபத்து! |
செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள். உஷார்! அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டாக்டர் அசோக் அகர்வால் தலைமையிலான குழுவினர்மேற்கொண்ட ஆய்வின்படி, ஆரோக்கியமான ஆண்கள் 23 பேர் மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்சனை உள்ள 9 பேர் ஆகியோரிடமிருந்து பரிசோதனைக்காக உயிரணுக்கள் எடுக்கப்பட்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகா ஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தியபோது, செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது. குறிப்பாக, செல்போன்களை இடுப்புப் பகுதி, சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருப்பவர்கள் அல்லது நாளொன்றுக்கு குறைந்தது 4 மணிநேரத்துக்கும் மேல் பேசுபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், உயிரணுக்களின் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆரோக்கியமான ஆண்களை விட, அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
(மூலம் - வெப்துனியா) |
மருத்துவ குணமுடைய பூண்டு |
நம்மில் பலர் பூண்டு என்றால் உணவில் இருந்து எடுத்து ஓரங்கட்டி வைத்து விடுகிறோம். மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம், மலச் சிக்கல் போன்றவற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும். பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் செய்யும் சக்தியும் அதற்கு உள்ளதாம். வெண் குஷ்டம், குடல் வாயு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும். பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும். |
Monday, November 17, 2008
உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை? |
வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே சிறுநீர்கழிப்பது. தற்போது மழை காலம். இரவு நேரங்களில் பெரியவர்களே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எரிச்சலுடன் எழுந்து செல்ல வேண்டியதாகிறது. குழந்தைகள் என்றால் கேட்கவா வேண்டும்? மழைக்காலம் மட்டுமின்றி, மற்ற நேரங்களில் கூட உறங்கிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். பொதுவாக 3 அல்லது மூன்றரை வயது வரை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேலும் இது நீடித்தால் உடனடியாக அதை கவனிக்க வேண்டும். 10 வயது வரை கூட சில குழந்தைகள் படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தொல்லையாக இது மாறக்கூடும். என்ன காரணம்? உறங்கிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு உடல் நலக்கோளாறு அல்லது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம். உடல்நலக்கோளாறு என்று பார்த்தால் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பு, குடலில் பூச்சிகள் இருத்தல், சிறு மூத்திரப் பைகள் உருவாகுதல் போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் குழந்தை பயத்துடன் இருத்தல், ஆசிரியர்கள்- பெற்றோர்களிடம் ஏற்படும் அச்சம், மனதில் உண்டாகும் பீதி, வருத்தம், ஏமாற்றம் போன்றவை சிறுநீர் கழிப்புக்கான மன ரீதியான காரணங்கள். தீர்வு என்ன? படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை பெற்றோர் சிலர் கடுமையாகத் திட்டுகின்றனர். இதனை குழந்தைகள் அவமானமாகக் கருத்தலாம். சிறுநீர் கழிப்பை இது மேலும் அதிகமாக்கு. இதனால் எந்த பலனும் இல்லை. திட்டுவதற்கு பதில் குழந்தையிடம் சிறுநீர் கழிப்பதை நிறுத்தும்படியும், சிறுநீர் வரும்போது தன்னை தயங்காமல் அழைக்கும்படியும் பக்குவமாகப் பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும். தினமும் சிறுநீர் கழித்து விட்டு படுக்கச் செல்லும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். தூங்கிய ஒரு மணி நேரம் அல்லது 10, 11 மணி வாக்கில் குழந்தையை எழுப்பி மீண்டும் சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லக் கூடாது. வரவில்லை என்று குழந்தை கூறினால், பின்னர் வற்புறுத்தக்கூடாது. இதை ஒரு வழக்கமாக சிறிது காலம் செய்து வந்தால் படுக்கயில் சிறுநீர் போகும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடும். குழந்தைக்கு மன ரீதியாக என்ன பிரச்சனை என்று பெற்றோர்கள், அன்பாக விசாரித்து அனுசரணையாக அதை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். |
தீபாவளி பலகாரம்: புளிச்ச ஏப்பம் குணமாக... |
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டாலும், பலகாரங்கள் இன்னும் பல வீடுகளில் மிச்சமிருக்கும். அதை சாப்பிடவும் முடியாமல், பிறருக்கு கொடுத்துவிடவும் மனம் இல்லாமல் சிலர் படும் அவஸ்தை இருக்கிறதே, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது!. காரணம், அளவுக்கு அதிகமாக பலகாரங்கள் சாப்பிட்டதால் உருவான புளித்த ஏப்பம்தான். வீட்டில் செய்த முறுக்கு, அதிரசம், மிக்ஸர், மைசூர்பாகு, வடை, பஜ்ஜி, சொஜ்ஜி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பிடி பிடித்ததில், இந்த புளிச்ச ஏப்பம் உருவாகி வயிறு மந்தமாகிஇருக்கும். இதனால் பசியின்மையும் ஏற்பட்டு, வழக்கமான காலை டிபன் கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இதை குணப்படுத்த ஓர் எளிய வைத்தியம். முதலில் புளிச்ச ஏப்பம் வந்தவுடனேயே பதார்த்தங்களை மேலும் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். (கொஞ்சம் சிரமமான காரியம்தான். வேறு வழியில்லை) பின்னர், பால் அல்லது தண்ணீரில் சற்று வெல்லம் கலந்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து இளம் சூட்டில் இறக்கி, ஒரு தம்ளர் அளவுக்கு குடித்தால் புளிச்ச போயே, போய்விடும். இதன் பின், சுமார் 2 மணி நேரம் கழித்து இட்லி, இடியாப்பம் போன்ற நீராவியில் வேக வைத்த உணவு வகைகளை சிறிது சாப்பிட்டால், வயிறு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். |
'குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்' | |
| |
பள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிவைத்து, அதிக நேரம் வீட்டுப்பாடம் செய்ய வற்புறுத்துவது;தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருக்க அனுமதிப்பது; வீட்டிற்குள்ளே விளையாட வேண்டும் என்று சொல்வது... இவையெல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாமே பங்கம் விளைவிப்பதற்கு ஒப்பான செயல். ஆம், ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்கு மட்டுமே வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்க வேண்டும். நாள்தோறும் சில மணி நேரங்கள், அதாவது மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே குழந்தைகளை விளையாட விடுவது, அவர்களது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். வீட்டுக்கு வெளியே அமைதியான, மாசற்ற சூழல் இல்லையெனில், அவர்களை பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இவ்வாறு செய்வதால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேன்மையுடன் இருக்கும் என்கின்றனர், மருத்துவர்கள். குறிப்பாக, வெளியே வெளிச்சத்தில் விளையாடும் குழந்தைகளின் கண்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும் என்றும், கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எனவே, குழந்தைகளையே வீட்டிலேயே முடக்கி வைப்பதைபெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். |
குழந்தைகளின் கற்றல் திறனும் காலை-மதிய உணவும்! | |
| |
குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டு, கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கும், அவர்களது காலை மற்றும் மதிய உணவுக்கும்தொடர்பு உண்டு. ஆரோக்கியமான காலை மற்றும் மதிய உணவுகளை உட்கொள்ளும் சிறார்களின் கற்றல் திறன் மிகச் சிறப்பாக இருப்பது, மருத்துவ ஆய்வு ஒன்றின் மூலமாக தெரியவந்துள்ளது. பள்ளிச் செல்லும் குழந்தைகள் ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அவர்களது மன ஆரோக்கியமும், செயல்பாடுகளும் மேன்மை பொருந்தியதாக உள்ளது என்கின்றனர், ஆய்வாளர்கள். குழந்தைகளின் உணவுமுறைக்கும், அவர்களது கற்றல் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி அமெரிக்காவின் சின்சினாட்டியிலுள்ள ஊட்ட சிகிச்சை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர். அதில், சத்துள்ள காலை மற்றும் மதிய உணவுகளை தவறாமல் உட்கொள்ளும் குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றல் திறன் மிகுதியாக காணப்படுவதும், அவர்கள் தவறாமல் பள்ளிக்கு வருகை புரிவதும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் குறையின்றி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பயறு வகைகள், நூறு சதவிகித பழரசங்கள், கோதுமை உணவுகள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் வகைகள், ரொட்டிகள், முட்டைகள் போன்ற சத்துள்ள பொருட்களையே குழந்தைகளுக்கு உணவாக அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். |
குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை |
குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும்,அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ... * பிசிஜி - பிறப்பின் போது * ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது * ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள் * டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள் * டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள் * டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள் * அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள் * சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள் * எம்எம்ஆர் - 15-18 மாதங்கள் * எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள் * டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள் * ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள் * டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள் * டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள் * ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள் * எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5ஆண்டுகள் * வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள் * வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள் * டெட்டானஸ் - 10 ஆண்டுகள் * சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்) * டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள் * டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள் |
ரத்த அழுத்தத்தை குணமாக்க.... |
மிகக்கொடிய நோய்களில் ரத்த அழுத்தமும் ஒன்று. ஆரம்பத்திலேயே இதை தடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும். இதை குணப்படுத்த ஓர் எளிய டிப்ஸ்: நெல்லிக்காயை நன்றாக இடித்து சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து காலை, மாலை என தினமும் இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். இப்படி தொடர்ந்து 4 மாதங்கள் சாப்பிட்டு வர, படிப்படியாக ரத்த அழுத்தம் குறையும். |
நரம்பு மண்டல் பாதிப்புகளில் இருந்து விடுபட... |
நரம்பு மண்டல பாதிப்பு நோய்க்கு சோயாபீன்ஸ் மிகச்சிறந்த மருந்தாக திகழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனிலுள்ள ஹாங்காங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹங்-ஃபேட் என்பவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்தனர். இதில், பக்கவாதம், வாதம் போன்ற நரம்பியல் நோய்களைகளுக்கு சோயாபீன்ஸ் மற்றும் கொண்டை கடலையிலுள்ள சத்துக்கள் அருமருந்தாக திகழ்வது தெரியவந்தது. இவற்றில் காணப்படும் இஸோஃப்ளேவோன் என்ற பொருள், நரம்பு மண்டல் பாதிப்புகளை சீராக்குகிறது. எனவே, இதுபோன்ற பயறு வகைகளை உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம் நரம்பு மண்டல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
குழந்தைகளின் ஐ.க்யூ.வும் தந்தையின் இருப்பும்! | |
| |
தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. எனப்படும் அறிவுத்திறன் அளவெண் மிகுதியாக உள்ளவர்களாக இருப்பதாக, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் தந்தையர் நாள்தோறும் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. இதுதொடர்பான ஆய்வு ஒன்றை, நியூகாஸில் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 1958-ல் பிறந்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மட்டும்போதாது, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளிடமே தந்தையர்கள் மிகுதியாக நெருக்கத்துடன் பழகுவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. எனவே, குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தந்தையரும் நேரத்தை ஒதுக்கி, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியமாகும். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லிவிட்டுச் சென்றது, இங்கே சாலப் பொருந்தும்! | |
(மூலம் - வெப்துனியா |
அப்பா செல்லங்களுக்கு அறிவாற்றல் அதிகம்! |
தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், கூர்மையானஅறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது ஆய்வில்தெரியவந்துள்ளது. லண்டன் நியூகாஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு நடத்தினர். பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 11 ஆயிரம் பேரிடம் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டன. இதில், பெற்றோர்களுடன் சேர்ந்து வாழும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக தந்தையருடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ எனப்படும் கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்தது. இதில், மற்றொரு முக்கிய அம்சம். பெரும்பாலும் ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்புடன் ஒட்டிக்கொள்கின்றன என்பதும் தெரியவந்தது. எனவே, அலுவலகம், பணம் என ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும். இது, குழந்தைகளின் அறிவாற்றலுக்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. |
Saturday, October 4, 2008
Saturday, September 27, 2008
உன் நினைவுகளோடான என் வாழ்கை
உன் நினைவுகளோடான என் வாழ்கைநீயும் திரிகிறாயோநம் காதலின் நினைவுகளோடுஎன்னை போன்று..
எந்த ரயிலில்எதிர் எதிர் இருக்கையில்அமர்ந்து பேசி போனோமோஅந்த ரயிலில்உனக்காவும்ஒரு இருக்கை பிடித்துபேசி போகிறேன்தனிமைகளோடு..
நீ என்னோடுமிக சிரித்துபேசி பயணித்த தருணங்களில்நம்மை பார்த்தஅதே கண்கள்இப்போதும் என்னை பார்க்கின்றனவித்யாசமாய் !!
இரவினிலும்ரயில் நிலைய இருக்கைகளில்தன் நிழலை சிந்துகிறமரங்களை போலஉன் மீது சிந்திகிடக்கின்றனஎன் சிந்தனைகள்..
ரயிலையும்தண்டவாலத்தையும்தாங்கி கொண்டிருக்கும் கற்களாய்மாற்றமுறும் மனத்தில்வெடித்த பிளவுகளாய்நம் பிரிவுகள்..
இன்றும்,உன்னுடன் உலவியபழய இடங்களுக்குஎதிர்பாராமல் செல்லநேரிடுகையில்சட்டென குறைந்து விடுகிறதுஒரு எட்டு வருடம்எனது வாழ்க்கையில்..
ஆதி
------------------------------------------------------------------------------
பச்சையம் மாறாமல் கிடக்கின்றன...
உன் வியர்வை .., மஞ்சள்
வாசம் சுமந்த .....
உன் மடல்கள் .......
எனக்கு சிறகுகள் தந்து
வாழ்வாய் இருந்ததும்.......
என் சிறகுகள் வெட்ட
வாளாய் இருந்ததும்..........
உன்னை சுமந்த ........ உன்
மடல்கள் தான் ...
மீண்டும் ..மீண்டும் ..
உன் மடல் வாசிக்கும் தருணங்களில் ..,
பனி ஊசி சொருகும் .
இதய வலியை உனக்கெப்படி
உரைப்பது நான்...........
மௌனமாய் சுவாசம் நிரப்புகிறேன்..
உன் வியர்வை ..., மஞ்சள்
வாசத்தை......
கனவுகளில் இன்றென்றும்
உலா வருகிறோம் ...
சிவப்பு தாவணியில் நீயும்...
அரும்பு மீசையுடன் நானும் ........
பச்சையம் மாறாமல்
நாளையும் கிடப்பில் இருக்கும்
உன் மடல்களும்..... என் கனவுகளும்.. by......முடிவிலி
-------------------------------------------------------------
காதலிக்காமலே இருந்திருக்கலாம்..
நாம்,காதலிக்காமலே இருந்திருக்கலாம்!நம்,காதல் சுவடுகள்மற்றவர்களுக்கு தெரியாமல்இருப்பது பரவாயில்லை!ஆனால்,நமக்கே அதுமறைவதென்பது மிகவும்வலி தருவதாய்!ஒன்று மட்டும் புரியவில்லை.காலம் கடந்துவிட்டதா?இல்லை, காதல் தான் கசந்துவிட்டதா?நீ, இல்லாதஒவ்வொரு மணித்துளியும்,நெடும் இரவும்,சுடும் பகலும்,என் வாழ்க்கையைப்பாலைவனமாகமாற்ற வல்லதாய்!நீ,பரந்த நீல வானமாய்!நானோ,வரண்ட நீள் பூமியாய்!இக்கரைக்குஅக்கரை பச்சை தான்மறுக்கவில்லைஆயினும் வந்திருக்கலாம்நீ,ஓர் மழைத்துளியாய்!நான் காதலித்திருக்கலாம்உன்னை மட்டும்மல்லாமல்என்னையும் கொஞ்சம்!வாழ்க்கை இவ்வளவுதனிமையாய் மாறும்என்பது தெரிந்திருந்தால்!எனக்குத் தெரியவில்லை!நீ,என்னை நீங்கிச் செல்வாயா?இல்லை,செல்வதையாவது சொல்வாயா?மனதும் அறிவும் வெவ்வேறாய்!நெருங்கிச் செல்வதும்விலகி ஓடுவதும்உனக்கோர் விளையாட்டாய்!மறந்துவிடாதே!நீ விளையாடும் பொருள்என் இதயம் என்பதை!என்னைப் புரிந்து கொள்ளஎனக்கான உன்ஓர் நிமிடம் தருவாயா?உனக்கே உரிதான பதில்களைஉன்னை அன்றியார் தான் கூறுவர்?காத்திருக்கிறேன்,கனவிலாவது கண்ணசைப்பாய் என்று!! - அகிலா