Monday, November 17, 2008

தீபாவளி பலகாரம்: புளிச்ச ஏப்பம் குணமாக...
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டாலும், பலகாரங்கள் இன்னும் பல வீடுகளில் மிச்சமிருக்கும். 

அதை சாப்பிடவும் முடியாமல், பிறருக்கு கொடுத்துவிடவும் மனம் இல்லாமல் சிலர் படும் அவஸ்தை இருக்கிறதே, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது!. 

காரணம், அளவுக்கு அதிகமாக பலகாரங்கள் சாப்பிட்டதால் உருவான புளித்த ஏப்பம்தான். 

வீட்டில் செய்த முறுக்கு, அதிரசம், மிக்ஸர், மைசூர்பாகு, வடை, பஜ்ஜி, சொஜ்ஜி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பிடி பிடித்ததில், இந்த புளிச்ச ஏப்பம் உருவாகி வயிறு மந்தமாகிஇருக்கும். 

இதனால் பசியின்மையும் ஏற்பட்டு, வழக்கமான காலை டிபன் கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இதை குணப்படுத்த ஓர் எளிய வைத்தியம்.

முதலில் புளிச்ச ஏப்பம் வந்தவுடனேயே பதார்த்தங்களை மேலும் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். (கொஞ்சம் சிரமமான காரியம்தான். வேறு வழியில்லை)

பின்னர், பால் அல்லது தண்ணீரில் சற்று வெல்லம் கலந்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து இளம் சூட்டில் இறக்கி, ஒரு தம்ளர் அளவுக்கு குடித்தால் புளிச்ச போயே, போய்விடும்.

இதன் பின், சுமார் 2 மணி நேரம் கழித்து இட்லி, இடியாப்பம் போன்ற நீராவியில் வேக வைத்த உணவு வகைகளை சிறிது சாப்பிட்டால், வயிறு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

No comments: