சாகும் என் காதல் ....
உன் கடைசி வார்த்தைகளில் கழுத்தறுப்பட்ட என் கனவுகள்....
பீய்ச்சும் குருதியில் முங்கி.. மெல்ல சாகும் என் காதல்....
காத்திருப்பை மட்டுமே பரிசளித்த காலத்தை வைதபடிக்கு ...
வீசுகிறேன் வெறுங்கையை ......
உதிர்ந்து சிதறும் கடைசி ஒற்றை ரோஜா ...
கணவனின் கை கோர்த்தபடிக்குநீ சிந்திய
ஏளன புன்னகையின் விடத்தில்
இன்னும் இன்னும் நீலம் பாரிக்கும் பிரபஞ்சம்....
இதயம் கிள்ளி கைத்தடியில் சொருகியபடிக்கு
நீளும் என் பயணம்.....
No comments:
Post a Comment