Monday, November 17, 2008

அப்பா செல்லங்களுக்கு அறிவாற்றல் அதிகம்!
தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், கூர்மையானஅறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது ஆய்வில்தெரியவந்துள்ளது.

லண்டன் நியூகாஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு நடத்தினர். பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 11 ஆயிரம் பேரிடம் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டன. இதில், பெற்றோர்களுடன் சேர்ந்து வாழும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகமாக இருந்தது. 

அதிலும் குறிப்பாக தந்தையருடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ எனப்படும் கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்தது. 

இதில், மற்றொரு முக்கிய அம்சம். பெரும்பாலும் ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்புடன் ஒட்டிக்கொள்கின்றன என்பதும் தெரியவந்தது.

எனவே, அலுவலகம், பணம் என ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும். 

இது, குழந்தைகளின் அறிவாற்றலுக்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

No comments: