ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!
திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன: * நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.அதாவது, வீட்டை விட்டுக் கிளம்பும்போதோ அல்லது வீட்டுக்குள் நுழையும்போதோ.* மாதத்துக்கு 7 மாலை நேரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக பொழுதைக் கழிக்க வேண்டும். அதில், வெளியே சென்று இரண்டு முறை டின்னர் சாப்பிட வேண்டியது கட்டாயம். * மாதத்துக்கு இரு முறை காதலுணர்வுடன் கணவனும், மனைவியும் மாலை வேளையில் ஒரு சிறிய வாக்கிங் போக வேண்டும். * குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரை தவிர்த்துவிட்டு, கணவனும் மனைவியும் தனியாக, மாதத்துக்கு ஒரு முறை ஓட்டலுக்கோ அல்லது சினிமா தியேட்டருக்கோ செல்ல வேண்டும். * மாதத்துக்கு ஒருமுறையேனும், கணவன் தனது மனைவிக்கு பூச்செண்டு போன்ற ஏதேனும் ஒரு கிஃப்ட் வழங்க வேண்டும். இவற்றை எப்போதும் கடைப்பிடித்து, அன்பைப் பறிமாறிக் கொண்டிருந்தால்... திருமண வாழ்க்கை இனிதாக தொடரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
(மூலம் - வெப்துனியா)
No comments:
Post a Comment