குழந்தைகளின் ஐ.க்யூ.வும் தந்தையின் இருப்பும்! | |
| |
தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. எனப்படும் அறிவுத்திறன் அளவெண் மிகுதியாக உள்ளவர்களாக இருப்பதாக, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் தந்தையர் நாள்தோறும் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. இதுதொடர்பான ஆய்வு ஒன்றை, நியூகாஸில் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 1958-ல் பிறந்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மட்டும்போதாது, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளிடமே தந்தையர்கள் மிகுதியாக நெருக்கத்துடன் பழகுவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. எனவே, குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தந்தையரும் நேரத்தை ஒதுக்கி, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியமாகும். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லிவிட்டுச் சென்றது, இங்கே சாலப் பொருந்தும்! | |
(மூலம் - வெப்துனியா |
Monday, November 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment