Tuesday, November 18, 2008

செல்போனால் ஆண்மைக்கு ஆபத்து!
செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள். உஷார்! அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டாக்டர் அசோக் அகர்வால் தலைமையிலான குழுவினர்மேற்கொண்ட ஆய்வின்படி, ஆரோக்கியமான ஆண்கள் 23 பேர் மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்சனை உள்ள 9 பேர் ஆகியோரிடமிருந்து பரிசோதனைக்காக உயிரணுக்கள் எடுக்கப்பட்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

இந்த உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகா ஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தியபோது, செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது.

குறிப்பாக, செல்போன்களை இடுப்புப் பகுதி, சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருப்பவர்கள் அல்லது நாளொன்றுக்கு குறைந்தது 4 மணிநேரத்துக்கும் மேல் பேசுபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 

இதனால், உயிரணுக்களின் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது. 

ஆரோக்கியமான ஆண்களை விட, அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)

No comments: