பீர், காபி, ஒயின் அருந்தினால் விந்தணுக்கள் குறையும்: ஆய்வு | |
| |
பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், பீர், ரெட் ஒயின் மற்றும் காபி போன்றவற்றில் உள்ள ஆஸ்ட்ரோஜென்போன்ற பொருட்கள், ஆண் தன்மையை பாதிக்கும் வேதிப் பொருட்களுக்கு இணையான குணங்களை பெற்றிருப்பது தெரியவந்தது. மேற்கண்ட மதுவகைகளுடன் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து சாப்பிடும்போது, ஆண் தன்மை முற்றிலும் நீர்த்துப் போகிறதாம். அதாவது, விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. இதனால், ஆண்களின் கருத்தரிப்பு விகிதமும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
Tuesday, November 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment