மருத்துவ குணமுடைய பூண்டு |
நம்மில் பலர் பூண்டு என்றால் உணவில் இருந்து எடுத்து ஓரங்கட்டி வைத்து விடுகிறோம். மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம், மலச் சிக்கல் போன்றவற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும். பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் செய்யும் சக்தியும் அதற்கு உள்ளதாம். வெண் குஷ்டம், குடல் வாயு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும். பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும். |
Tuesday, November 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment