நரம்பு மண்டல் பாதிப்புகளில் இருந்து விடுபட... |
நரம்பு மண்டல பாதிப்பு நோய்க்கு சோயாபீன்ஸ் மிகச்சிறந்த மருந்தாக திகழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனிலுள்ள ஹாங்காங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹங்-ஃபேட் என்பவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்தனர். இதில், பக்கவாதம், வாதம் போன்ற நரம்பியல் நோய்களைகளுக்கு சோயாபீன்ஸ் மற்றும் கொண்டை கடலையிலுள்ள சத்துக்கள் அருமருந்தாக திகழ்வது தெரியவந்தது. இவற்றில் காணப்படும் இஸோஃப்ளேவோன் என்ற பொருள், நரம்பு மண்டல் பாதிப்புகளை சீராக்குகிறது. எனவே, இதுபோன்ற பயறு வகைகளை உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம் நரம்பு மண்டல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
No comments:
Post a Comment