குழந்தைகளின் கற்றல் திறனும் காலை-மதிய உணவும்! | |
| |
குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டு, கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கும், அவர்களது காலை மற்றும் மதிய உணவுக்கும்தொடர்பு உண்டு. ஆரோக்கியமான காலை மற்றும் மதிய உணவுகளை உட்கொள்ளும் சிறார்களின் கற்றல் திறன் மிகச் சிறப்பாக இருப்பது, மருத்துவ ஆய்வு ஒன்றின் மூலமாக தெரியவந்துள்ளது. பள்ளிச் செல்லும் குழந்தைகள் ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அவர்களது மன ஆரோக்கியமும், செயல்பாடுகளும் மேன்மை பொருந்தியதாக உள்ளது என்கின்றனர், ஆய்வாளர்கள். குழந்தைகளின் உணவுமுறைக்கும், அவர்களது கற்றல் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி அமெரிக்காவின் சின்சினாட்டியிலுள்ள ஊட்ட சிகிச்சை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர். அதில், சத்துள்ள காலை மற்றும் மதிய உணவுகளை தவறாமல் உட்கொள்ளும் குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றல் திறன் மிகுதியாக காணப்படுவதும், அவர்கள் தவறாமல் பள்ளிக்கு வருகை புரிவதும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் குறையின்றி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பயறு வகைகள், நூறு சதவிகித பழரசங்கள், கோதுமை உணவுகள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் வகைகள், ரொட்டிகள், முட்டைகள் போன்ற சத்துள்ள பொருட்களையே குழந்தைகளுக்கு உணவாக அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். |
Monday, November 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment