உன் நினைவுகளோடான என் வாழ்கை
உன் நினைவுகளோடான என் வாழ்கைநீயும் திரிகிறாயோநம் காதலின் நினைவுகளோடுஎன்னை போன்று..
எந்த ரயிலில்எதிர் எதிர் இருக்கையில்அமர்ந்து பேசி போனோமோஅந்த ரயிலில்உனக்காவும்ஒரு இருக்கை பிடித்துபேசி போகிறேன்தனிமைகளோடு..
நீ என்னோடுமிக சிரித்துபேசி பயணித்த தருணங்களில்நம்மை பார்த்தஅதே கண்கள்இப்போதும் என்னை பார்க்கின்றனவித்யாசமாய் !!
இரவினிலும்ரயில் நிலைய இருக்கைகளில்தன் நிழலை சிந்துகிறமரங்களை போலஉன் மீது சிந்திகிடக்கின்றனஎன் சிந்தனைகள்..
ரயிலையும்தண்டவாலத்தையும்தாங்கி கொண்டிருக்கும் கற்களாய்மாற்றமுறும் மனத்தில்வெடித்த பிளவுகளாய்நம் பிரிவுகள்..
இன்றும்,உன்னுடன் உலவியபழய இடங்களுக்குஎதிர்பாராமல் செல்லநேரிடுகையில்சட்டென குறைந்து விடுகிறதுஒரு எட்டு வருடம்எனது வாழ்க்கையில்..
ஆதி
------------------------------------------------------------------------------
பச்சையம் மாறாமல் கிடக்கின்றன...
உன் வியர்வை .., மஞ்சள்
வாசம் சுமந்த .....
உன் மடல்கள் .......
எனக்கு சிறகுகள் தந்து
வாழ்வாய் இருந்ததும்.......
என் சிறகுகள் வெட்ட
வாளாய் இருந்ததும்..........
உன்னை சுமந்த ........ உன்
மடல்கள் தான் ...
மீண்டும் ..மீண்டும் ..
உன் மடல் வாசிக்கும் தருணங்களில் ..,
பனி ஊசி சொருகும் .
இதய வலியை உனக்கெப்படி
உரைப்பது நான்...........
மௌனமாய் சுவாசம் நிரப்புகிறேன்..
உன் வியர்வை ..., மஞ்சள்
வாசத்தை......
கனவுகளில் இன்றென்றும்
உலா வருகிறோம் ...
சிவப்பு தாவணியில் நீயும்...
அரும்பு மீசையுடன் நானும் ........
பச்சையம் மாறாமல்
நாளையும் கிடப்பில் இருக்கும்
உன் மடல்களும்..... என் கனவுகளும்.. by......முடிவிலி
-------------------------------------------------------------
காதலிக்காமலே இருந்திருக்கலாம்..
நாம்,காதலிக்காமலே இருந்திருக்கலாம்!நம்,காதல் சுவடுகள்மற்றவர்களுக்கு தெரியாமல்இருப்பது பரவாயில்லை!ஆனால்,நமக்கே அதுமறைவதென்பது மிகவும்வலி தருவதாய்!ஒன்று மட்டும் புரியவில்லை.காலம் கடந்துவிட்டதா?இல்லை, காதல் தான் கசந்துவிட்டதா?நீ, இல்லாதஒவ்வொரு மணித்துளியும்,நெடும் இரவும்,சுடும் பகலும்,என் வாழ்க்கையைப்பாலைவனமாகமாற்ற வல்லதாய்!நீ,பரந்த நீல வானமாய்!நானோ,வரண்ட நீள் பூமியாய்!இக்கரைக்குஅக்கரை பச்சை தான்மறுக்கவில்லைஆயினும் வந்திருக்கலாம்நீ,ஓர் மழைத்துளியாய்!நான் காதலித்திருக்கலாம்உன்னை மட்டும்மல்லாமல்என்னையும் கொஞ்சம்!வாழ்க்கை இவ்வளவுதனிமையாய் மாறும்என்பது தெரிந்திருந்தால்!எனக்குத் தெரியவில்லை!நீ,என்னை நீங்கிச் செல்வாயா?இல்லை,செல்வதையாவது சொல்வாயா?மனதும் அறிவும் வெவ்வேறாய்!நெருங்கிச் செல்வதும்விலகி ஓடுவதும்உனக்கோர் விளையாட்டாய்!மறந்துவிடாதே!நீ விளையாடும் பொருள்என் இதயம் என்பதை!என்னைப் புரிந்து கொள்ளஎனக்கான உன்ஓர் நிமிடம் தருவாயா?உனக்கே உரிதான பதில்களைஉன்னை அன்றியார் தான் கூறுவர்?காத்திருக்கிறேன்,கனவிலாவது கண்ணசைப்பாய் என்று!! - அகிலா
No comments:
Post a Comment